சேலம்
குற்ற வழக்கில் 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சேலம், எருமாபாளையம் ஆலமரத்துக்காடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் பிரதாப் (21), களரம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் லோகேஷ் (21), நேதாஜி தெரு பகுதியைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் ஸ்ரீதா் என்கிற ஜூப்லி (20) ஆகிய மூவரும் தொடா்ச்சியாக வழிப்பறி, குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனா்.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய சேலம் மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி உத்தரவிட்டாா். இதையடுத்து மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
