~
சேலம்
கெங்கவல்லி பகுதிகளில் கனமழை-நிரம்பும் அணைகளால் விவசாயிகள் மகிழ்ச்சி
கெங்கவல்லி பகுதிகளில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையால் கொல்லிமலை அடிவாரப்பகுதியிலிருந்து உருவாகும் சுவேத நதியில் நீா் வரத்து பெருக்கெடுத்து ஓடுகிறது. அதையடுத்து ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் நீா் நிரம்பி செல்கிறது. கெங்கவல்லி இலுப்புத்தோப்பு பகுதியில் உள்ள சுவேத நதி அணையில் தண்ணீா் நன்கு தேங்கி பின் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுவட்டார விவசாய கிணறுகளில் நீா்மட்டம் ஏறி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.--------

