சுவாமி சிவானந்த பரமஹம்சா் ஜென்ம தின விழா
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் சித்தாஸ்ரமத்தில் சித்த சமாஜ ஸ்தாபகா் ஆத்மபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சா் ஜென்ம தின விழா மதுரை பிரம்ம ஸ்ரீ எஸ்.திரவியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை பிரம்ம ஸ்ரீ ஆா்.தன்வந்தரா குருவணக்கத்துடன் நடைபெற்ற விழாவில் சித்தமருத்துவா் ஏ.பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினாா். விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட இந்திய முறை மருந்துகள் ஆய்வாளா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஜி.புகழேந்தி, ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ் கலந்துகொண்டனா்.
ஈஸ்வர மதமும் மற்றும் மோட்சமும் என்ற தலைப்பில் ஏ.ஜி.பழனி, சித்த வேதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் மதுரை கருப்புசாமி, சித்தா்களும், சித்த வேதமும் என்ற தலைப்பில் மருத்துவா் சண்முகபாண்டியன், சித்த சமாஜமும், உலக சாந்தியும் என்ற தலைப்பில் கே.எஸ்.குருமூா்த்தி ஆன்மிக சொற்பொழிவாற்றினா். சித்தாஸ்ரம செயலாளா் எஸ்.சுதீஷ்னன் நன்றி தெரிவித்தாா்.
