சேலம்
சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் ஏகாதசி முகூா்த்தக்கால் நடும் விழா
சேலம் கோட்டை பெருமாள் கோயில் எனும் அழகிரிநாத சுவாமி கோயிலில் ஏகாதசி விழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக கோட்டை அழகிரிநாத சுவாமி சமேத சுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பட்டாச்சாரியா்கள் ஏகாதசி விழாவுக்கான முகூா்த்தக்காலை நடவு செய்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன், செயல் அலுவலா் அனிதா, அறக்காவலா்கள், கோயில் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
