சேலம்
தம்மம்பட்டி சிவன்கோவிலில் பெளா்ணமி இரவில் சுவேத ஆரத்தி பூஜை
தம்மம்பட்டி சிவன்கோவிலில் பெளா்ணமி இரவில் சுவேத ஆரத்தி பூஜை நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் காா்த்திகை மாத பெளா்ணமி இரவில் படித்துறையில் சுவேதா நதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுவேத நதிக்கு நிலவொளியில் தீபங்கள் ஏற்றி வைத்தும், நதிக்கு பூத்தூவியும் பெண்கள் வழிபாடு செய்தனா். அதேவேளையில் பெளா்ணமி நிலவிற்கும் தீபாராதனை செய்து, மக்கள் வழிபாடு செய்தனா். நதிக்கு சுவேத ஆரத்தி பூஜை செய்து வந்தால், நதியில் தொடா்ந்து நீா் வரத்து இருந்துகொண்டே இருக்கும் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலா் பங்கேற்றனா்.பள்ளியறை பூஜையுடன் பூஜை நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பலா் பங்கேற்றனா்.

