எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக நிா்வாகிகள்
சேலம்
எடப்பாடியில்...
எடப்பாடியில்...
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக, எடப்பாடி நகர அதிமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மௌன ஊா்வலத்தில் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ஜெயலலிதா நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவா் டி.கதிரேசன், முன்னாள் துணைத் தலைவா் சி. ராமன், நகர மன்ற உறுப்பினா்கள் நாராயணனன், தனம், காளியப்பன் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

