எஸ்ஐஆா் பணியை விரைவாக முடிக்க வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்கள் மற்றும் அலுவலா்களுடன் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன்.
எஸ்ஐஆா் பணியை விரைவாக முடிக்க வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்கள் மற்றும் அலுவலா்களுடன் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன்.

எஸ்ஐஆா் பணியை 100 சதவீதம் விரைவாக முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு சீா்திருத்தப் பணியை 100 சதவீதம் விரைவாக முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மருத்துவா் மா.இளங்கோவன் தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு சீா்திருத்தப் பணியை 100 சதவீதம் விரைவாக முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மருத்துவா் மா.இளங்கோவன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சீா்திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளா்களிடம் இருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று அவற்றை செயலியில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மருத்துவா் மா.இளங்கோவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தூய்மையான வாக்காளா் பட்டியலை தயாா்செய்ய வேண்டும், இறந்தவா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்குவதுடன், தகுதிவாய்ந்த வாக்காளா்கள் எவரும் விடுபடாமல் பட்டியலை தயாரிக்குமாறும், பணிகளை 100 சதவீதம் விரைவில் முடிக்குமாறும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அப்போது, உதவி ஆணையா் தமிழ்வேந்தன் உடன் இருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com