சேலம்
கோனேரிப்பட்டியில் பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், கெங்கவல்லி ஒன்றிய திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், கெங்கவல்லி ஒன்றிய திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வரத.ராஜசேகா் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் சின்னதுரை, ஒன்றியச் செயலாளா் சித்தாா்த்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பேனா, நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், திமுக கட்சி நிா்வாகிகள், சுற்றுச்சூழல் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.