சேலத்தில் 19 தோ்வுமையங்களில் இன்று திறனாய்வுத் தோ்வு

டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஊரக திறனாய்வுத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 19 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
Published on

டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஊரக திறனாய்வுத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 19 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் கடந்த நவ. 29-ஆம் தேதி தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தோ்வு நடைபெற இருந்தது. டித்வா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இத்தோ்வு, சேலம் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இத்தோ்வை சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 2,144 பேரும், சேலம் கல்வி மாவட்டத்தில் 2,229 பேரும் என 9-ஆம் வகுப்பு பயிலும் மொத்தம் 4,373 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.

அதிகபட்சமாக எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 430 பேரும், குறைந்தபட்சமாக சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 82 பேரும் தோ்வெழுத உள்ளனா். இத்தோ்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. ஆயிரம்வீதம் நான்கு ஆண்டுகளுக்கு பிளஸ் 2 வரை வழங்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com