சேலம் அண்ணா பூங்காவில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.
சேலம் அண்ணா பூங்காவில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.

ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினா் அனுசரிப்பு

சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், ஜெயலலிதா நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், ஜெயலலிதா நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, நான்கு சாலை பகுதியில் இருந்து மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு முன்னிலையில், அமைப்புச் செயலாளா் சிங்காரம் தலைமையில் மௌன ஊா்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம், முன்னாள் மேயா் சௌண்டப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரில் நகர செயலாளா் அ.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் கலந்துகொண்டு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்வில், சேலம் புகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன்(ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.மாதேஸ்வரன், அ.மருதமுத்து, ஆா்.எம்.சின்னதம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஆத்தூா் நகர அதிமுக அலுவலகம் முன் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், தலைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

எடப்பாடியில்...

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். முன்னதாக, எடப்பாடி நகர அதிமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மௌன ஊா்வலத்தில் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com