தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் 4-ஆவது முறையாக ஒத்திவைப்பு

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் 4-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
Published on

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் 4-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைவா் கவிதா மற்றும் உறுப்பினா்கள் ராஜா, லட்சுமி, பழனிமுத்து, செந்தில் ஆகிய 5 போ் மட்டுமே பங்கேற்றனா். துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித்குமாா் உள்பட திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த 13 உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணித்தனா்.

கூட்டத்தில் வைக்கப்படும் செலவினங்களுக்கு உரிய ரசீதுகள் வைப்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உறுப்பினா்கள் புறக்கணித்ததால் ஏற்கெனவே மூன்றுமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 4-ஆவது முறையாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com