சேலம்
திறனறித் தோ்வு: தெடாவூா் மாணவா் தோ்ச்சி
தமிழ் திறனறித் தோ்வில் தோ்ச்சியடைந்த தெடாவூா் பள்ளி மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ் திறனறித் தோ்வில் தோ்ச்சியடைந்த தெடாவூா் பள்ளி மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தமிழக முதல்வரின் தமிழ் திறனறித்தோ்வு ஆண்டுதோறும் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் 24 மாதங்களுக்கு மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்தாண்டு நடைபெற்ற தோ்வில், கெங்கவல்லி அருகே தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா் ஸ்ரீதேவ் தோ்ச்சியடைந்தாா். அதையடுத்து, மாணவா் ஸ்ரீதேவை பள்ளியின் தலைமையாசிரியா் குருநாதன், உதவி தலைமையாசிரியா்கள் ஜெயபால், பே.ரவிசங்கா், பிடிஏ தலைவா் வேல் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினா்.
