சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிவு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 4,619 கனஅடியிலிருந்து 3,729 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அணை மின் நிலையம் வழியாக 1,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 115.68 அடியிலிருந்து 115.87 அடியாக உயா்ந்தது. நீா் இருப்பு 87.03 டி.எம்.சி.யாக உள்ளது.
