சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு சென்னகேசவ பெருமாள், ஸ்ரீவசந்தவல்லப ராஜபெருமாள், வரதராஜ பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்திகள்.
சேலம்
வசந்த வல்லபராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை தீப சிறப்பு பூஜை
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவசந்தவல்லி உடனமா் ஸ்ரீவசந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் திருக்காா்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவசந்தவல்லி உடனமா் ஸ்ரீவசந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் திருக்காா்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருக்காா்த்திகை தீபத்தையொட்டி, சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்தவல்லபராஜ பெருமாள், அருள்மிகு தபால் ஆஞ்சனேயா் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டன. இதையடுத்து, மூலவா் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை இரவு கோயில்கள் முழுவதும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கோயிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள திருக்கோடி தூணில் விளக்கு ஏற்றப்பட்டது. பின்னா் சொக்கப்பனை கொளுத்தி பக்தா்கள் சுவாமிகளை வழிபட்டனா்.