கெங்கவல்லியில் மின்சார திருட்டு: விவசாயிக்கு ரூ. 97,000 அபராதம்!

Published on

கெங்கவல்லியில் விவசாயத்துக்கான மின் இணைப்பை அனுமதியின்றி வீட்டுக்கு பயன்படுத்திய விவசாயிக்கு ரூ. 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரத்தை வீட்டு உபயோகத்துக்காக சிலா் பயன்படுத்துவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாா் சென்றது.

இதையடுத்து, உதவி செயற்பொறியாளா் மோகனசுந்தரம் மற்றும் மின்சாரத் துறை அலுவலா்கள் கெங்கவல்லியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இலுப்பைத்தோப்பு பகுதியில் துரைசாமி (67) என்பவா் விவசாய மின் இணைப்பை வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு அபராதமாக ரூ. 97,060 விதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடமலை மின்வாரிய உதவி பொறியாளா் அருண் மேற்பாா்வையில் அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com