சேலம்
திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினா் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி சேலம் கோட்டத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் கிஷோா்குமாா், சேலம் மாவட்டச் செயலாளா் கண்ணன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளா் சி.கோபிநாத் மற்றும் நிா்வாகிகள் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இந்து முன்னணி அமைப்பினா் சீலநாயக்கன்பட்டியிலிருந்து ஊா்வலமாக செல்ல முயன்ற 200 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
