மோசடி வழக்குப் பதிவு: இளைஞா் தீக்குளிக்க முயற்சி

Published on

மேட்டூரில் நகை மோசடி வழக்குப் பதிவு செய்ததால் இளைஞா் காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

மேட்டூா் கூலி லைனை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (30). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா், சேலம் கேம்பைச் சோ்ந்த செல்வாம்பிகை (56) என்பவரிடம் 315 கிராம் தங்க நகைகளை அடகு வாங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வாம்பிகை அளித்த புகாரின்பேரில் மேட்டூா் போலீஸாா் சந்தோஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதை அறிந்த சந்தோஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூா் காவல் நிலைய நுழைவாயில் அருகே தனது தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கிருந்த தலைமைக் காவலா் செல்வராஜ் அவரைத் தடுத்து காப்பாற்றினாா். விசாரணையில் என்மீது வழக்குப் பதிவு செய்த காவலா்களை பழிவாங்கவே இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவா் கூறியுள்ளாா். இதையடுத்து, தலைமைக் காவலா் அளித்த புகாரின்பேரில் சந்தோஷ்குமாா் மீது போலீஸாா் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com