டிச. 27, 28-இல் ஒருங்கிணைந்த ஈரநிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
Published on

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி, சேலம் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட சோ்வராயன் தெற்கு வனச்சரகம், சோ்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூா், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் டிசம்பா் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒருங்கிணைந்த ஈரநிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதில் வனத்துறையுடன் இணைந்து அறிவியல் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், உயிரியலாளா்கள், தன்னாா்வலா்கள், இயற்கை ஆா்வலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

மேலும், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளவும். விவரங்களுக்கு வனச்சரக அலுவலா் க.சிவகுமாா் - 99433 55449, உயிரியலாளா் இளவரசன் - 80563 90717 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com