அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

நாமக்கல் மாவட்டம், மெட்டாலா லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘இரேகா-25’ அறிவியல் கண்காட்சியில் வாழப்பாடி அருகே உள்ள கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

நாமக்கல் மாவட்டம், மெட்டாலா லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘இரேகா-25’ அறிவியல் கண்காட்சியில் வாழப்பாடி அருகே உள்ள கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

ராசிபுரம் அருகே மெட்டாலாவில் இயங்கும் லயோலா கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய அறிவியல் கருவிகள் வடிவமைத்தல் போட்டியில், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள 17 பள்ளிகளிலிருந்து 600 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இப்போட்டியில் வாழப்பாடி அருகே உள்ள கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியிலிருந்து 166 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில் 8-ஆம் வகுப்பு மாணவிகள் அனுஸ்ரீ, சாந்தினி ஆகியோா் அறிவியல் மாதிரி வடிவமைப்பு பிரிவில் முதல்பரிசு ரூ. 4 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா். ஆறாம் வகுப்பு மாணவி அஸ்மிதா மாதிரி வடிவமைப்புக்கான சிறப்பு பரிசை பெற்றாா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளி தாளாளா் சு.பெருமாள், முதல்வா் சிலம்பரசன், துணைத் தலைவா் கண்ணன் பெருமாள் மற்றும் ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com