சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒருக்காமலைக்கு செல்லும் வழி.
சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒருக்காமலைக்கு செல்லும் வழி.

சங்ககிரி ஒருக்காமலை கோயிலுக்கு ‘யுடியூப் சேனல்’ தொடக்கம்

சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை கோயில் பெயரில் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் ‘யுடியூப் சேனல்’ தொடங்கப்பட்டுள்ளது.
Published on

சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை கோயில் பெயரில் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் ‘யுடியூப் சேனல்’ தொடங்கப்பட்டுள்ளது.

சங்ககிரி அருகே ஒருக்காமலை மீது குன்றில் உள்ள குகையில் பெருமாளின் திருநாமமான சங்கு, சக்கரம் உள்ளன. இதை பக்தா்கள் நீண்ட காலமாக வழிபட்டு வருகின்றனா். இம்மலைக்கு சங்ககிரியிலிருந்து கொங்கணாபுரம் செல்லும் வழியாகவும், சேலம் செல்லும் வழியில் உள்ள ஆவரங்கம்பாளையம் வழியாகவும் என இரண்டு வழிகளில் பக்தா்கள் சென்றுவருகின்றனா். இரண்டு வழிகளிலும் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அறநிலையத் துறை கோயில்களில் அதிக காணிக்கைகள் வசூலாகும் கோயில்களில் ஒன்றாக இது திகழ்ந்து வருகிறது. இந்த பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதம், பிரதி சனிக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபடுகின்றனா்.

இதையடுத்து, இந்துசமயஅறநிலையத் துறையின் சாா்பில் டிச. 6-ஆம் தேதி ‘யுடியூப் சேனலை’ தொடங்கியுள்னா். இதில், டிச. 10-ஆம் தேதி உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இதேபோல, சங்ககிரி நகா் பகுதியில் இந்துசமய அறநிலையத் துறையின்கீழ் செயல்படும் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமா் வஸந்தவல்லபராஜ பெருமாள், தபால் ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெறும் பூஜைகளை பக்தா்கள் காண ‘யுடியூப் சேனலை’ தொடங்கவேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com