சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.
கா்நாடக மாநிலம், ஹூப்ளி - திருவனந்தபுரம் (வண்டி எண் 07361) விரைவுரயில் டிச. 23-ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு சேலம் (இரவு 9.30 மணி), ஈரோடு (10.30 மணி) திருப்பூா் (மணி 11.20)வழித்தடத்தில் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.
திருவனந்தபுரம் - பெங்களூரு (வண்டி எண் 07362) விரைவுரயில் டிச. 24-ஆம் தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் போத்தனூருக்கு இரவு 9.40, திருப்பூருக்கு 10.30, ஈரோடுக்கு 11.10, சேலத்துக்கு இரவு 12.17 மணிக்கு வந்து மறுநாள் பெங்களூரு சென்றடைவதாக தெரிவித்துள்ளது.
