நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை
நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு ரூ. 4.05 கோடியில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நரசிங்கபுரம் நகராட்சிக்கு அலுவலகத்துக்கு இடப்பற்றாக்குறை இருந்தது. இதையடுத்து, நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ரூ. 4.05 லட்சத்தில் கட்டடம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடங்கப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது.
இதில், நகராட்சி ஆணையா் அ.பவித்ரா, சிறப்பு அழைப்பாளா்களாக நகர செயலாளா் என்.பி.வேல்முருகன், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
