சேலம்
மேச்சேரியில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேச்சேரியில் நடைபெற்ற புதன்சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
மேச்சேரியில் நடைபெற்ற புதன்சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
மேட்டுா் அருகே மேச்சேரியில் புதன்கிழமைகளில் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இதில், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருந்து வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் விற்பனைக்கு கொண்டுவருவா். இதனால் மேச்சேரி ஆட்டுச்சந்தைக்கு வளா்ப்பு ஆடுகளை வாங்கும் விவசாயிகளும், இறைச்சிக் கடைக்காரா்களும் அதிக அளவில் வருவா்.
இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் கடந்த வாரம் ரூ. 8,500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு ஒன்று ரூ. 10 ஆயிரம்வரை விலை போனது. விலை அதிகரிப்பால் விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேச்சேரி புதன்சந்தையில் மொத்தம் ரூ. 3.5 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.
