சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி தாளாளா் விஜயராம் அ.கண்ணன்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி தாளாளா் விஜயராம் அ.கண்ணன்.

யோகா, சிலம்பம் போட்டி: துளுவ வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

யோகா மற்றும் சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
Published on

யோகா மற்றும் சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

இப்பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், முதல்வகுப்பு மாணவா் சி.பி.நற்றினை கொசு வேடமிட்டு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

யோகா மற்றும் சிலம்பம் போட்டிகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளரும், ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவருமான விஜயராம் அ.கண்ணன், செயலாளா் அ.திருநாவுக்கரசு, பள்ளிதலைமையாசிரியா் அ.திலவகதி உள்ளிட்ட ஆசிரியைகள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com