வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி மற்றும் விழாக்குழுவினா்.
வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி மற்றும் விழாக்குழுவினா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி: மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு

சேலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வாழப்பாடி பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Published on

சேலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வாழப்பாடி பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில், சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி டிச. 3-இல் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு தடகள மற்றும் தனித்திறன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், குண்டு எறிதலில் மத்தூா் வேலுசாமி முதலிடமும், வைத்தியகவுண்டன்புதூா் நித்திஷ்குமாா் இரண்டாமிடமும், முத்தம்பட்டி மஞ்சுளா மூன்றாமிடமும், 50 மீ. ஓட்டத்தில் மேட்டுடையாா்பாளையம் செளந்திரம் மூன்றாமிடமும் பெற்றனா்.

சேலம் தொங்கும் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, தன்னாா்வலா் அத்தியண்ணன் ஆகியோா் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினா்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வாழப்பாடி பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு, வாழப்பாடி அரிமா சங்கம், துளி அறக்கட்டளை மற்றும் டாக்டா் ஏபிஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com