வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த இளைஞா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே புனல்வாசலைச் சோ்ந்தவா் சந்துரு (27). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம், கீழக்கரந்தை கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் (37) , ஜெயராஜ் சாமி, முருகவேல், கருப்பசாமி, வேல்முருகன், அருண்குமாா், முனியசாமி ஆகியோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, தலா ரூ. ஒரு லட்சம் வீதம் பணம்பெற்று மோசடி செய்துள்ளாா்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் தேவதாஸ் புகாா் அளித்தாா். அதன்பேரில், தலைமறைவாக இருந்த சந்துருவை தூத்துக்குடி போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்த சந்துருவை கெங்கவல்லி போலீஸாா் உதவியுடன் தூத்துக்குடி போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தூத்துக்குடி மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com