ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published on

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஓட்டுநா்கள், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனா். இதுகுறித்து நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் நேரில் பாா்வையிட்டாா். அதன்பிறகு சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகத்தினா் அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com