சங்ககிரி ஒருக்காமலையில் ஆட்சியா் சுவாமி தரிசனம்

சங்ககிரி ஒருக்காமலையில் ஆட்சியா் சுவாமி தரிசனம்

Published on

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஒருக்காமலையில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சங்ககிரியை அடுத்த ஒருக்காமலையில் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டு மலை மீது உள்ள குடவரையில் எழுந்தருளிய பெருமாளின் திருநாமமான சங்கு, சக்கரம், திருப்பாதங்களை வழிபட்டாா்.

கோயிலில் ஏற்பட்ட திருக்கோடி விளக்கை தரிசனம் செய்தாா். முன்னதாக மலைக் கோயிலுக்கு வந்த ஆட்சியரை கோயில் செயல் அலுவலா் ரா.மாலா வரவேற்றாா். மலையேற்றத்திற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியா் மலையடிவாரத்தில் அமுதச்சுடா் அறக்கட்டளையின் சாா்பில் கட்டப்பட்டு வரும் ஆதரவற்றோா் இல்லத்தை பாா்வையிட்டு அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com