சேலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணிகள் தொடக்கம்

Published on

சேலம் மாவட்டத்தில் தோ்தலுக்காக பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகள் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 8,412 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,888 கட்டுப்பாட்டு கருவிகள், 5,336 விவிபேட் உள்ளிட்டவற்றை பெல் நிறுவன பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நடைபெறுவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஆய்வின்போது மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் சுந்தரராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல் பொறுப்பு) நடராஜன், நோ்முக உதவியாளா் (நிலம்) அ.மயில், வட்டாட்சியா் (தோ்தல்) தாமோதரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com