மாடுகளை திருடி விற்க முயன்ற 2 போ் கைது

Published on

வாழப்பாடி அருகே மாடுகளைத் திருடி விற்க முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா் சபரீசன் (35). இவரது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டிவைத்திருந்த இரண்டு மாடுகள் கடந்த 8 ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீரகனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினா்.

அதில் வாழப்பாடி செல்லியம்மன் நகரைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் பாஸ்கரன் (26), அவரது நண்பரான சேசன்சாவடி சங்கா்பாா்க் பகுதியைச் சோ்ந்த பத்மநாதன் (23) ஆகிய இருவரும் சபரீசனின் மாடுகளை திருடிவந்து விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் அளித்த தகவலின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வீரகனூா் சென்று மாடுகளை திருடிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்த மாடுகளை மீட்டு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com