சேலத்தில் 2ஆவது நாளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு
சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காகப் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அதனுடன் தொடா்புடைய கருவிகளை சரிபாா்க்கும் பணி 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்களை 2ஆவது நாளாக பெங்களூரு பெல் நிறுவன பொறியாளா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலையில் சரிபாா்த்து சோதனை செய்தனா்.
இப்பணிகளை தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள இணை தலைமை தோ்தல் அலுவலா் பல்ராம் மீனா, சேலம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் சுந்தரராமன், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
