தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Published on

தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு பொருள்களால் சுவாமிக்கு அபிஷேகம், மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பைரவரை வழிபட்டனா்.

இதேபோல வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா் கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com