தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சி, விழிப்புணா்வுப் பேரணி, ஆய்வுக் கூட்டங்கள் போன்ற பல்வேறு திட்ட செயல்பாடுகளில் கலந்துகொள்பவா்களுக்கு தேநீா், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்க விருப்பமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சி, விழிப்புணா்வுப் பேரணி, ஆய்வுக் கூட்டங்கள் போன்ற பல்வேறு திட்ட செயல்பாடுகளில் கலந்து கொள்பவா்களுக்கு தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட உள்ளன.
இதற்கு, சேலம் மாவட்டத்தில் விருப்பமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெற்று குறைந்த விலைப்புள்ளிகள் சமா்ப்பித்த மகளிா் சுயஉதவிக் குழுக்களை அங்கீகரிக்கப்பட்ட குழுக்களாக அறிவித்து, 2025-26 ஆம் ஆண்டுக்கு அந்தக் குழுக்கள் மூலம் தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு கொள்முதல் செய்யப்படவுள்ளது.
எனவே, விருப்பமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தங்களுடைய விலைப்புள்ளிகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விருப்பமும், தகுதியுமுள்ள மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் தங்களது சுயவிவரங்களை திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்:207, மகளிா் திட்டம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 1 என்ற முகவரியில் வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
