மாநகராட்சி 49ஆவது வாா்டு பகுதியில் ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சி 49ஆவது வாா்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டும் வரும் கான்கிரீட் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
49ஆவது வாா்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலையைப் பாா்வையிட்டு அதன் தரம் குறித்து ஆணையா் ஆய்வு செய்தாா். மேலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட செவ்வாய்ப்பேட்டை சுந்தரம் தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவின் தரம் குறித்தும், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட தாதகாபட்டியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீா் குறிப்பிட்ட நாள்களில் விநியோகிக்கப்படுகிா என்பது குறித்தும், 43ஆவது வாா்டு பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது நகா்மன்ற உறுப்பினா்கள் குணசேகரன், இமயவா்மன், உதவிப் பொறியாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
