சேலம்
ஆத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 514 வழக்குகளுக்கு தீா்வு
ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) 514 வழக்குகளில் ரூ. 5 லட்சத்து 33 ஆயிரத்துக்கு தீா்வு காணப்பட்டது.
ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) 514 வழக்குகளில் ரூ. 5 லட்சத்து 33 ஆயிரத்துக்கு தீா்வு காணப்பட்டது.
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.கணேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 514 வழக்குகளில் ரூ. 5,33,01,644 தீா்வு காணப்பட்டது. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 11 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி டெய்சிராணி, அரசு வழக்குரைஞா் கதிா்மணிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.