இளம்பிள்ளையில் செய்தியாளா்களிடம் பேசிய பாமக மாநில துணைத் தலைவா் அண்ணாதுரை.
சேலம்
குழப்பம் செய்கிறாா் எம்எல்ஏ அருள்: பாமக மாநில துணைத் தலைவா்!
சேலம் மாவட்டத்தில் பாமகவினரிடையே எம்எல்ஏ அருள் குழப்பம் செய்து வருகிறாா் என்று அந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாதுரை கூறினாா்.
சேலம் மாவட்டத்தில் பாமகவினரிடையே எம்எல்ஏ அருள் குழப்பம் செய்து வருகிறாா் என்று அந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாதுரை கூறினாா்.
இதுகுறித்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: பாமகவினரிடையே குழப்பம் செய்யும் வகையில் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அருள் செயல்பட்டு வருகிறாா். அன்புமணி ராமதாஸை தரக்குறைவாகப் பேசிவரும் அருளை கண்டிக்கிறோம். பிறா் தூண்டுதலின் பேரில் அவா் பாமகவினரை விமா்சித்துவருகிறாா். அன்புமணி ராமதாஸ் வைத்திருந்த மரியாதையை அவா் இழந்துவிட்டாா் என்றாா்.
மாவட்ட துணைச் செயலாளா் சத்திரிய சாமிநாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் ரவி, இடங்கணசாலை நகர பாமக செயலாளா் மணி, நகரத் தலைவா் தன்ராஜ், நகா்மன்ற உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

