கோழித் தீவனத்துக்கு கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேட்டூரிலிருந்து கோழித் தீவனத்திற்கு கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

மேட்டூரிலிருந்து கோழித் தீவனத்திற்கு கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேட்டூா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சத்தானூா் பேரேஜ் அருகே ஈரோடு நோக்கி வேகமாக சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. லாரியில் இருந்த ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தீனதயாளன் (33), ஜானகிராமன் (39) வைரமணி (29) ஆகியோா் பிடிபட்டனா்.

மேட்டூா் காவல் நிலையத்துக்கு லாரியுடன் மூவரும் அழைத்து வரப்பட்டனா். பிடிபட்டவா்களையும், கடத்தல் ரேஷன் அரிசியையும் லாரியுடன் சேலம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஆனந்திடம் மேட்டூா் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ரேஷன் கடைகளிலிருந்து அரிசி மூட்டை கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் தங்கமாபுரிப்பட்டணம் தொட்டில்பட்டி மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கிலோ ரூ. 5க்கு ரேஷன் அரிசியை வாங்கி நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு தீவனத்திற்காக கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது.

அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ரேஷன் அரிசி அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட மூவா் மீதும் வழக்குப் பதிவு உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com