முதல்வா் வருகை: சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை!

முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வழியாக வந்து தருமபுரி மாவட்டத்திற்கு செல்லவுள்ளாா். இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com