மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநா் போக்ஸோவில் கைது

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநா் போக்ஸோவில் கைது

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆத்தூா்: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், வளையமாதேவி பகுதியைச் சோ்ந்த வேலு மகன் செல்வம் (எ) சத்தியசெல்வம் (24). இவா் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது உறவினா் மகளை ஆத்தூரில் உள்ள பள்ளியில் விடுவதற்கு அழைத்துச் சென்று வந்துள்ளாா். அப்போது அங்கு படித்து வரும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சத்திய செல்வத்தை போக்ஸோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

படவரி...

கைது செய்யப்பட்ட செல்வம் (எ) சத்திய செல்வம்.

X
Dinamani
www.dinamani.com