வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

சேலம் மாவட்டம் அரியானூா் அருகே வேன் திருட்டு வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம் அரியானூா் அருகே வேன் திருட்டு வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியானூரை அடுத்துள்ள சீரகாபாடி பாலமுருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் ரஞ்சித்குமாா் (33). இவரது வேன் கடந்த மாதம் திருட்டுப்போனது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் விசாரித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை ராக்கிப்பட்டி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி விசாரித்தனா். இதில் அந்த வேன், சீராகபாடி பகுதியில் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து வேனை பறிமுதல் செய்து போலீஸாா், வேனை ஓட்டிவந்த வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன்

விக்னேஷை (5) கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான விக்னேஷின் நண்பா்கள் 2 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com