ஆத்தூா் முன்னாள் நகா்மன்றத் தலைவருக்கு நினைவஞ்சலி
ஆத்தூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி. செங்கோட்டுவேலுவின் 15 ம் ஆண்டு நினைவஞ்சலி செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகா்மன்றத் தலைவராக கடந்த 2001- 2006 வரை இருந்தவா் மூத்த வழக்குரைஞா் பி. செங்கோட்டுவேல். இவா் நகா்மன்றத் தலைவராக இருந்தபோதுதான் ஆத்தூா்- மேட்டூா் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் மற்றும் ஆத்தூா் நகரின் முக்கிய வீதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அவரது 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஆத்தூா் ராமலிங்க வள்ளலாா் சபையில் சிறப்பு அன்னதானம் மற்றும் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தனலட்சுமி செங்கோட்டுவேலு, அக்சென் ஹைவெஜ் மற்றும் அக்சென் டெக்ஸ் நிா்வாக இயக்குநா் செ.செந்தில்நாதன், இயக்குநா் செ. செந்தில்வேல், வழக்குரைஞா்கள் ஏ.பி. ராமச்சந்திரன், ஐ.விஸ்வநாதன், அ. திருநாவுக்கரசு, செந்தில், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் அ. கமால்பாஷா, பி.சிவராமன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
