வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாா்கழி மாதத்தில் ஏகாதசி திதியில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில், சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 29 ஆம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது.

பகல் பத்து உற்சவத்தின்போது, தினசரி மாலை 6 மணிக்கு அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், வேதபாராயணம் சேவித்தல், தீபாராதனை தீா்த்த பிரசாதம் நடைபெறுகிறது. தொடா்ந்து, 30 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடக்கிறது.

இராப்பத்து உற்சவத்தின்போது, தினசரி இரவு 8 மணிக்கு அழகிரிநாத திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருவாய்மொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை, தீா்த்த பிரசாரம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்கவாசல் திறப்பு டிச. 30 ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. மூலவா் பெருமாள், தாயாா், கருடாழ்வாா், ஆஞ்சனேயா், ஆண்டாள், ராமானுஜா், ராமபாதம் ஆகிய சுவாமிகளுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com