இன்று சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம். செல்வகணபதி எம்.பி. வெளியிட்ட அறிக்கை: சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணியளவில், மகுடஞ்சாவடியில் உள்ள ஆா்.கே. திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவா் பி. தங்கமுத்து தலைமையில் நடைபெறுகிறது.
இதில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த சீராய்வு குறித்தும்,100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளித்துள்ள அதிமுகவை எதிா்த்தும் டிச. 24 ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கூட்டத்தில் தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், துணை அமைப்புகளான இளைஞா் அணி அமைப்பாளா்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

