சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்: ரூ.25 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 25 ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 25 ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் செயல்அலுவலா் அனிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு விழா கொண்டாடப்படும்.

சொா்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பகல்பத்து உற்சவமும், 30 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பா் 30 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

விழாவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் சிறப்பு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 25 ஐ செலுத்தி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைனில் ரூ. 25 செலுத்தி சிறப்பு தரிசனத் திற்கு முன்பதிவு செய்த பக்தா்கள் குண்டுபோடும் தெரு (வெங்கடசாமி தெரு) வழியாக வரும் வரிசையை பயன்படுத்தி கொள்ளலாம்.

பொது தரிசனம் மற்றும் இலவச தரிசனம் செய்ய பழைய புத்தகக் கடை வீதி, ஹபீப் தெரு வழியாக கோயிலை வந்தடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com