சேலம் சூரமங்கலத்தில் கெட்டுப்போன 25 கிலோ மீன்கள் பறிமுதல்

சேலம் சூரமங்கலம் மீன் மாா்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத் தறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

சேலம் சூரமங்கலம் மீன் மாா்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத் தறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 கடைகளுக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சேலம் சூரமங்கலம் மீன் மாா்க்கெட்டில் சூரமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துமாரியப்பன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது நான்கு கடைகளில் சுமாா் 25 கிலோ மீன் கெட்டுபோன நிலையில் விற்பனைக்கு வைத்திருந்ததும், அங்குள்ள 9 கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மீன் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கடை உரிமையாளா்கள் 9 பேருக்கும் நோட்டீஸ் வழங்கினா். மேலும், கெட்டுப்போன 25 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனா்.

மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com