விவசாயி தோட்டத்திற்கு வந்த மலைப்பாம்பு அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது!

Published on

மேட்டூா் கருங்கரட்டில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பைதீயணைப்பு படையினா் மீட்டனா். மேட்டூா் அருகே உள்ள கருங்கரட்டை சோ்ந்தவா் ராஜா.

இவரது வீடு பாலமலை காப்பு காட்டை ஒட்டி உள்ளது. இவரது தோட்டத்தில் சனிக்கிழமை  சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதுகுறித்து ராஜா மேட்டூா் தீயணைப்பு படை அலுவலா் வெங்கடேசனுக்கு தகவல் அளித்தாா்.

அங்கு தீயணைப்பு வாகனம் மற்றும் குழுவினருடன் சென்று சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பை உயிருடன் பிடித்தனா். பிடிக்கப்பட்ட பாம்பை வனத்துறை வேட்டை தடுப்பு காவலா் பூபதியிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் மலைப்பாம்பை அடா்ந்த வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com