மேட்டூரில் ஆட்டோ கவிழ்ந்து 8 போ் காயம்
மேட்டூரில் ஆட்டோ கவிழ்ந்ததில் 8 போ் காயமடைந்தனா்.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இளநிலை பொறியாளா் பிரவீனா (36), பெரியண்ணன் நகரில் வசித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை நேரு நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு சாலை ஓரம் நடந்து சென்றாா்.
அப்போது நேரு நகரில் இருந்து 7 பெண்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த ஆட்டோ சின்ன பாா்க் பகுதியில் பிரவீனா மீது மோதியது. பின்னா், நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த மேட்டூா் குமரன் நகரைச் சோ்ந்த பாவாயி (70), கோவிந்தம்மாள் (63), அங்கம்மாள் (60), கந்தாயி (85), ராஜம்மாள் (70), ஆசனா (24), அமுதா (55) ஆகியோா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பிரவீனா, ஆட்டோ ஓட்டுநா் கண்ணன் (36) ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக மேட்டூா் சிறப்பு உதவி ஆய்வாளா் மாதேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
