நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு: 8,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Updated On :23 டிசம்பர் 2025, 12:40 am IST

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனப் பகுதிகளில் மழை குறைந்ததால், பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் கடந்த 19-ஆம் தேதிமுதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது பாசனத் தேவை குறைந்ததால், திங்கள்கிழமை இரவுமுதல் மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கனஅடியிலிருந்து 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 1,232 கனஅடியிலிருந்து 1,024 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 8,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 111.25 அடியிலிருந்து 110.43 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 79.02 டி.எம்.சி.யாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.