சங்ககிரியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சங்ககிரி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா
Published on

சங்ககிரி: சங்ககிரி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில், சங்ககிரி கோட்டாட்சியா் ஆய்வு கூட்டரங்கில் புதன்கிழமை (டிச. 24) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், சங்ககிரி, எடப்பாடி வருவாய் கோட்ட அளவிலான வேளாண், தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என வருவாய்த் துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com