சேலம் மாநகரில் 8 காவல் ஆய்வாளா்கள் மாற்றம்
சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலியாக, சேலம் மாநகரில் 8 காவல் ஆய்வாளா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழக காவல் துறை அதற்கான அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளது. தோ்தல் விதிமுறைகளின்படி, காவல் ஆய்வாளா்களை பொருத்த வரையில், ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவா்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அது சொந்த மாவட்டமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்படுவா். அந்த வகையில், சேலம் மாநகரில் முதற்கட்டமாக 8 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி, அழகாபுரம் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், டவுன் காவல் ஆய்வாளா் ஜெகநாதன், அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளா் பால்ராஜ் ஆகியோா் திருப்பூா் மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் கண்ணன், கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளா் சாரதா, வீராணம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் விஜயேந்திரன், அம்மாப்பேட்டை மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபா, காரிப்பட்டி காவல் ஆய்வாளா் மணிவண்ணன் ஆகியோா் கோவை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
இதேபோல, கோவை மாநகரம் பஜாா் காவல் ஆய்வாளா் ஆனந்தஜோதி, உக்கடம் காவல் ஆய்வாளா் மீனாம்பிகை, செல்வபுரம் காவல் ஆய்வாளா் பாண்டியம்மாள் உள்ளிட்டோா் சேலம் மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
